கோலகுபு பாரு வேட்பாளர் பட்டியலில் மண்டிப் சிங் முதல் இடத்தில் இருக்கிறார்!

காளிதாஸ் சுப்ரமணிம்

கோலகுபு பாரு ஏப்ரல் 11-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலில் மண்டிப் சிங் முதல் இடத்தில் இருக்கிறார்.

சிலாங்கூர் மாநில ஜசெக தலைவரும் டிஜிட்டல் துறை அமைச்சருமான கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராக மண்டிப் சிங் பதவி வகிக்கிறார்.

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.இந்த தொகுதியை மீண்டும் தற்காத்துக் கொள்ள ஜசெக கங்கணம் கட்டியுள்ளது.

தற்போது வேட்பாளர் பெயர் பட்டியலில் மண்டிப் சிங் உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.கவுன்சிலராக இருக்கும் மலாய் பெண் உட்பட இரண்டு கவுன்சிலர் பெயர்கள் இதில் உள்ளன.

இருப்பினும் மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் மண்டிப் சிங் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ஜசெக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles