அமானா இக்தியார் மலேசியா நிதியகத்தின் வாயிலாக கூடுதலாக 50 மில்லியன் வெள்ளி பாராட்டுக்குரியது!

செ வே. முத்தமிழ் மன்னன்

செமினி ஏப்ரல் 15-
இந்திய மகளிர் தொழில் முனைவோருக்காக அமானா இக்தியார் மலேசியா நிதியகத்தின் வாயிலாக கூடுதலாக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

இதற்காக டத்தோ ரமணனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக உலுலங்காட் தொகுதி கெஅடிலான் தலைவர் இராஜன் முனுசாமி தெரிவித்தார்.

சிலாங்கூர் வேஃப் எனப்படும் சிலாங்கூர் மாநில சமூகநல மற்றும் தொண்டூழிய மேமபாட்டு இயக்க ஏற்பாட்டில் நேற்று சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 150 பெண்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

வேஃப் உறுப்பினர்கள் சுற்று வட்டார மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருவதோடு தமது அரசியல் பயணத்திற்கு இவர்கள் முக்கிய பங்காற்றி வருவதாகவும் இராஜன் முனுசாமி தெரிவித்தார்.

செமினி சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராமச்சந்திரன் அர்ஜூனன் , சந்திரன் ராமசாமி ஆகிய இருவரோடு செமினி கிராமத் தலைவர் நடேசன் ஆகியோரும் சிறப்பு வருகை புரிந்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles