நமக்காக போராட அமைச்சரவையில் தமிழ் அமைச்சர் இல்லை!மிண்டாஸ் செயலாளர் இராஜசேகரன் ஆவேசம்

காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஏப்ரல் 19-
மலேசிய அமைச்சரவையில் நமக்காக போராட தமிழ் அமைச்சர் இல்லை. இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பெருத்த வேதனையாகும் என்று மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆர். இராஜசேகரன் தெரிவித்தார்.

அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக சிவகுமார் இருந்தபோது இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தந்தார்.

ஆனால் இன்று வரை மூன்று தொழில் துறைகளுக்கு 300 பேர் கூட கிடைக்கவில்லை.

இப்போது எங்களுக்கு உதவி செய்ய எந்தவொரு இந்திய அமைச்சர் குறிப்பாக தமிழ் அமைச்சர் இல்லை.

தமிழ் அமைச்சர் இருந்தால் எங்களுக்கு உதவி புரிவார்.
ஆனால் எங்களுக்கு உதவ யாரும் இல்லை.

முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் மீண்டும் களத்தில் இறங்கி இந்திய தொழில் துறைகளுக்கு உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

இப்போதுள்ள அமைச்சர்களை சந்திக்க முடியவில்லை. Protocol முறைப்படி அனுமதி வாங்கி கொண்டு வாருங்கள் என்று அமைச்சின் அதிகாரிகள் உத்தரவு போடுகிறார்கள்.

தேர்தல் நேரத்தில் எங்களிடம் portocal வாங்கிவிட்டா வாக்குகள் கேட்டார்கள்.

சிவகுமார், குலசேகரன், டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்த போது protocol இல்லை.
எங்கள் பிரச்சினை குறித்து பேச வருகிறோம் என்றால் உடனே வாருங்கள் என்பார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். இந்திய தொழில் துறைகளுக்கு விடிவுகாலம் பிறக்க சிவகுமார் உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles