
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஏப்ரல் 19-
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்கள் முழுமையாக கிடைக்க
முன்னாள் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் உதவ வேண்டும் என்று மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுதந்திரன் தங்கையா கேட்டுக் கொண்டார்.
அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமரத்தி கொள்ள அனுமதி வழங்கக்கோரி 12 ஆண்டுகளாக போராடினோம்.
அரசாங்கத்திடம் பல ஆண்டுகளாக போராடி இறுதியாக கடந்த ஆண்டு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் பெரும் முயற்சியால் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்கள் கிடைத்தார்கள்.
பல சவால்களை கடந்து எங்களுக்கு பேருதவி புரிந்த மாண்புமிகு சிவகுமார் அவர்களுக்கு இந்த வேளையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இருப்பினும் இன்றும் எங்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமாரின் உதவியை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மனிதவள அமைச்சர் என்ற முறையில் அவரால் எங்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.
இதனிடையே
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்க பாடுபட்ட மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எங்களுடன் இணைந்து போராடிய மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்தியர் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் டத்தின் மகேஸ்வரி மற்றும் ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
இன்று சீன அசெம்பிளி மண்டபத்தில் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது அதன் தலைவர் சுதந்திரன் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

