கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தல்! பிரச்சாரம் சூடு பிடித்தது

கிள்ளான், ஜூன் 10-
98 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை 14 ஆம் தேதி தோட்ட மாளிகையில் தேர்தல் நடைபெறுகிறது.

வி.கே.கே. தியாகராஜன் புதல்வர் வி.கே.கே. இராஜசேகரன் அணியும் பிரபாகரன் அணியும் தேர்தலில் போட்டியிடுகிறது.

தலைவர் பதவிக்கு இராஜசேகரன் மற்றும் பிரபாகரன் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

துணை தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணியில் பன்னீர் செல்வம் மற்றும் பிரபாகரன் அணியில் மோகனா சின்னத்தம்பி போட்டியிடுகிறார்கள்.

உதவித் தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணியில் டாக்டர் சித்ரா தேவியும் பிரபாகரன் அணியில் கவி மாறனும் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு இராஜசேகரன் அணியில் ஐ.ஆர். டாக்டர் பிரபாகரன் மற்றும் பிரபாகரன் அணியில் சண்முக செல்வியும் போட்டியிடுகின்றனர்.

கவுன்சிலர் பதவிக்கு இராஜசேகரன் அணியில்
டாக்டர் செல்வராஜூ,
டாக்டர் இராஜசேகரன்,
டத்தோ கணேஷ்,
பிரவின் டத்தோ தமிழ்ச்செல்வம்,
குட்டி கிருஷ்ணன் மாதவன்,
டோனி கிளிபெர்ட்,
ஷாமில்,
டாக்டர் நெடுஞ்செழியன் வேங்கு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் பிரபாகரன் அணியில் மொத்தம் 14 பேர் கவுன்சிலர் பதவிக்கு களம் இறங்கி உள்ளனர்.

தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால் இரு அணிகளுக்கும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles