இயக்குனர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் காலமானார்!

சென்னை: ஜூன் 10-
இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்.

இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1941ம் ஆண்டு ஆகஸ்ட் 17இல் தேனியில் பிறந்தவர் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. சுகாதார ஆய்வாளராக தனது பணியை தொடங்கியவர் பாரதிராஜா.

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா.

பாரதிராஜாவின் முதல் படம் ’16 வயதினிலே’ முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார். ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்றவர்.

‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார் பாரதிராஜா. தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் மரியாதை திரையிடப்பட்டது

.2004இல் பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது ஒன்றிய அரசு. இயக்கம், தயாரிப்பு, கதாசிரியர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர். பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் என ரசிகர்களை ஈர்த்தவர்.

ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். மொத்தம் 44 படங்களை பாரதிராஜா இயக்கியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles