“தமிழ்க்குயிலார் விருது” ஆதரவுக்கு பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நன்றி கூறியது!!

ஈப்போ,ஜூன்10: பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இளம் எழுத்தாளர் ஒருவருக்கு சங்கத்தின் முதல் தலைவரான நாட்டின் எழுத்தாளுமைகளில் ஒருவரான அமரர் தமிழ்க்குயிலார் க.கலியபெருமாள் அவர்களின் நினைவாக “தமிழ்க்குயிலார்” விருது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில், ஒவ்வொரு ஆண்டும் அவ்விருதுகான செலவு தொகையை அவரது குடும்பத்தினர் வழங்கி பெரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்க்குயிலார் தம்பதியர் நினைவுநாளில் இவ்வாண்டுக்கான விருதுகான செலவு தொகையை அவரது குடும்பத்தினர் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளர் திரு.ம.ஆறுமுகத்திடன் வழங்கினர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்குயிலார் விருது அக்குடும்பம் ஆற்றி வரும் பங்களிப்பும் ஆதரவும் தனித்துவமானது.

அதுமட்டுமின்றி, சங்கத்தின் பணிமனையில் செயல்படும் தமிழ்க்குயிலார் நூலகத்திற்கும் அவரது குடும்பம் ஆண்டுக்கு வெ.500 வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்பாக இயங்கவும் தமிழ்க்குயிலார் அமரர் கலியப்பெருமாள் குடும்பத்தினர் வழங்கி வரும் ஆதரவிற்கும் பங்களிப்பிற்கும் அச்சங்கத்தின் தலைவர் சிவாலெனின் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொண்டார்.

அதே வேளையில்,ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தை தொடர்பு கொண்டு விருது மற்றும் நூலகத்திற்கான நிதியை வழங்கிடும் தமிழ்குயிலார் கலியபெருமாள் அவர்களின் மகன் தமிழ்த்திரு கலையரசன் அவர்களுக்கும் நன்றி பகிர்வதாக சிவாலெனின் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles