இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்க பாடுபடுவேன்!பத்து காஜா எம்பி சிவகுமார் முழக்கம்

காளிதாஸ் சுப்ரமணிம்
மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஏப்ரல் 19-
நாட்டில் உள்ள இந்திய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்க போராடுவேன் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.

நான் மனிதவள அமைச்சராக இருந்த போது அமைச்சரவையில் பேசி 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தந்தேன்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களும் இதற்கு முழு ஆதரவு வழங்கினார்.

ஆனால் இன்று வெறும் 300 அந்நியத் தொழிலாளர்கள் மட்டுமே கிடைத்திருக்கிறார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் 7,500 பேர் அங்கீகரிக்கப்பட்டது.

அப்படி இருந்தும் வெறும் 300 பேர் மட்டுமே கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது என்றால் அது பிரதமருக்கு தெரியாமல்கூட இருக்கலாம்.

இந்திய தொழில் துறைகளுக்கு 7 500 பேரை நீங்கள் தான் பெற்றுத் தந்தீர்கள்.

ஆகவே நீங்களே முயற்சி எடுத்து இதற்கு தீர்வு காணுங்கள் என்று மூன்று இந்திய பாரம்பரிய தொழில் சங்கங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

இது தொடர்பாக பிரதமருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டேன்.

விரைவில் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறேன்.

பிரதமரை சந்திக்கும் போது இதற்கு முழு தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் சுதந்திரன், செயலாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஸ், மலேசிய இந்திய டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் டத்தின் மகேஸ்வரி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles