
காளிதாஸ் சுப்ரமணிம்
கோலாலம்பூர் ஏப்ரல் 19-
ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் ம இகா தேசிய உதவித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுவதாக டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.
நான் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருடன் மிகவும் நெருக்கமான உறவு நீடிக்கிறது.
ம இகா வில் ஒற்றுமை நிலவ வேண்டும் . முக்கிய பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டால் கட்சி பிளவுபடும்.
ஆகையால் ஒற்றுமையை முன் நிறுத்தி நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்
என்று
மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

