கோலகுபு பாருவில்மின் சுடலை அமைக்கப்படும்!சுற்றுலா அமைச்சர் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்

கோலகுபு பாரு மே 10-
மக்கள் பயன்பெறும் வகையில் கோல குபு பாருவில் மின்சுடலை விரைவில் நிர்மாணிக்கப்படும்.
அதற்கான முழு செலவையும் நிர்வானா ஏற்றுக் கொள்ளும் என்று சுற்றுலா துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் அறிவித்தார்.

கோல குபு பாரு மக்கள் 20 ஆண்டுகளாக இங்கு மின்சுடலையை நிர்மாணிக்க வேண்டும் என போராடி வருவது எனக்கு தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் இப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஒரு சில பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கோல குபு பாருவில் மின்சுடலையை நிர்மாணிக்க நிர்வானா முன்வந்துள்ளது.

அதற்கான செலவுகளையும் நிர்வானா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மின்சுடலை நிச்சயம் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles