
காளிதாஸ் சுப்ரமணியம்
ரவாங் மே 11 –
மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.
அந்த வகையில் ரவாங் மனிதவள வள இலாகா வுக்கு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் 13 பேருக்கு சொக்சோ நிதியுதவியை வழங்கினார்.
விபத்து மற்றும் வேலை செய்யும் வாய்ப்பை இழந்த இவர்கள் சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிதியுதவியை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததை அடுத்து இவர்கள் இந்த நிதி உதவியை பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியுதவியை பெற்றுக் கொண்ட 13 பேரும் சொக்சோ நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இதனிடையே ரவாங் மனிதவள இலாகாவில் ரஹ்மா மெஸ்ரா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் சொக்சோ அதிகாரிகள், மனித வள அமைச்சின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

