
காளிதாஸ் சுப்ரமணியம்
2 வாரங்களாக கோல குபு பாருவை அனல் பறக்க செய்திருதது தேர்தல் பிரச்சாரங்கள்.
நேற்று இறுதி நாள் பிரச்சாரங்கள் முடிவுற்று இன்று அமைதியாக வாக்களிப்புகள் நடைபெற்றது.
காலை 8 மணி தொடங்கிய வாக்களிப்பு மாலை 6 மணிக்கு முடிவுற்றது.
இரு வார கடும் போராட்டத்திற்க்கும் பிரச்சாரத்திற்கும் பிறகு இன்று பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவ் 14 000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரிக்கத்தான் நெஷனல் வேட்பாளர் கைருல் அசாரி சாவுத் 10,131 வாக்குகள் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து மலேசிய மக்கள் கட்சி வேட்பாளர் 152 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளர் எரிஸ் ஞாவ் கெ ஸின் 188 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவ் 3869 வாக்குகள் அதிகம் பெற்று கோல குபு பாரு சட்டமன்றத்தை பக்கத்தான் வசம் தக்கவைத்துள்ளார்.
அஞ்சல் வாக்குகளில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவுக்கு 592 வாக்குகள் கிடைத்தன.
பெரிக்கத்தானுக்கு 156 வாக்குகள் கிடைத்தன.
மற்ற இரு வேட்பாளர் கள் தலா ஒரு வாக்கு பெற்றனர்.
இதன் வழி அஞ்சல் வாக்குகளில் 436 வாக்குகள் பெற்று பக்கத்தான் வேட்பாளர் முன்னிலை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோல பாரு சட்டமன்றத்தில் 40 413 வாக்காளர்களில் 61.51% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடந்த 2013லிருந்து ஜசெக நான்காவது தவனையாக கேகேபி சட்டமன்றத்தை தன்வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

