
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் மே 15-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மடானி அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் சுமத்திய பொய் குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடு பொடியாகிவிட்டன.
இனியும் இவர்களின் பொய் குற்றச்சாட்டுகள் மக்களிடம் எடுபடாது என்று ஜொகூர் மாநில இஸ்கந்தர் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி எம். கண்ணன் தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தின் மீதும் பிரதமர் மீதும் உண்மைக்கு புறம்பான பல்வேறு பொய்யுரைகள் கோலா குபு பாரு இடைத்தேர்தலில் பொறுப்பற்றவர்கள் முன் வைத்த போதிலும் மக்களின் தேர்வு ஹராப்பான் கூட்டணியாக அமைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இன்று தோல்வியில் இருந்து பாடம் கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து குற்றச் சாட்டுகளை அள்ளி வீசுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
எது எப்படி இருப்பினும் மக்களிடம் இவர்களின் கட்டுக்கதைகள் எடுப்படாது என்று அவர் நினைவுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதிக்கும் தலைவர்கள் தங்களது தொகுதி மக்களுக்கு சிறப்பான வகையில் சேவையாற்ற வேண்டும்.
களத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.