
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு மே 15-
கோலகுபு பாரு தாமான் டேசா புக்கிட் பூஜாங்கில் வீற்றிருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பன் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா வரும் ஜூன் 2 ஆம் தேதி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிற்பகலில் மகேஸ்வர பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்படும்.
இந்த ஆலயத் திருவிழாவில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று ஆலயத் தலைவர் இராமநாதன் என்ற BOY தெரிவித்தார்.
சுற்று வட்டார மக்கள் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டு ஆதரவு தரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.