நடுவானில் குலுங்கிய விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் CEO வருத்தம்!

சிங்கப்பூர், மே 23-
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து சிங்கப்பூர் போயிங் 777-300ER ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கரமாக குலுங்கியது.

இதன் காரணமாக பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார். விமானப் பணியாளர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை செயல் முறை அதிகாரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சார்பில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் நாங்கள் அவரது குடும்பத்துக்கு உறுதுணையாக நிற்போம்.

விமானத்தில் பயணித்தவர்களுக்கு ஏற்பட்ட இந்த அபாயகர அனுபவத்துக்கு நாங்கள் வருந்துகிறோம்.

அனைவருக்கும் துணையாக நாங்கள் இருப்போம். இது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles