புத்ரா வாணிப மையத்தில் அனைத்துலக புத்தக கண்காட்சியில் குயில் ஜெயபக்தியின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன

செ.வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் மே 24-
உலக புத்ரா வாணிப மையத்தில் இன்று தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி வரை அனைத்துலக புத்தக கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

நாட்டில் புகழ்பெற்ற புத்தக நிறுவனங்களின் புத்தகங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

நாடாறிந்த குயில் ஜெயபக்தியின் புத்தகங்களும் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது என்று குயில் ஜெயபக்தியின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.

ஓரே தமிழ் புத்தக நிறுவனமாக விளங்கும் குயில் ஜெயபக்தி நிறுவனம் ஆரம்ப முதல் இதுநாள் வரை இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு புத்தகங்கள், எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி புத்தகங்கள் விற்பனையில் உள்ளன.

இது தவிர்த்து தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதை கட்டுரை கவிதை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் இங்கு குவிந்துள்ளன.

மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை மற்றும் படைப்புகள் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

வாசிப்பு நமது சுவாசிப்பு என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப குயில் ஜெயபக்தி நிறுவனம் தொடர்ந்து தமிழ் பணியை ஆற்றி வருவதாக அவர் சொன்னார்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அறிவுத்திறனை மேன்மேலும் வளர்ந்து கொள்ள இந்த அனைத்துலக புத்தக கண்காட்சி வழிகாட்டுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles