தமிழ் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கையை வண்மையாக கண்டிக்கிறேன்:- ஃபாஹ்மி

காளிதாஸ் சுப்ரமணியம்

கூச்சிங் –
தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை வண்மையாக கண்டிக்கிறேன் என்று தகவல் தொடர்பு துணையமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் இதனை கூறினார்.

அண்மைய காலமாக தமிழ் ஊடகங்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் தொடுக்கும் வழக்கும், அச்சுறுத்தல் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளது.

மீஜா எனப்படும் மலேசிய தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம், தீபகற்ப மலேசிய ஊடகவியலாளர்கள் சங்கம்(NUJ) ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஊயலாளர்கள் தங்களின் கடமையை சுதந்திரமாக செய்ய வழிவிட வேண்டும். அரசியல் தலைவர்கள் அவர்களின் பணியில் தடையிடக் கூடாது என்று அமைச்சர் ஃபாஹ்மி கூறினார் .

இச்சர்சை குறித்து சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து பேசவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

அதன் பின் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாகவும் ஃபாஹ்மி கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles