
ஈப்போ, ஜுன். 4:
பேராக் ஈப்போ லிட்டில் இந்திய வளாகத்திற்கு நகைச்சுவை நடிகர் கிங்காங் மற்றும் நடிகர் முத்துக்காளையும் வருகை புரிந்த போது டி. எஸ். மற்றும் பிவி நகைக் கடை இயக்குனர் டத்தோ அமாலுடின் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றார்.
நகைச்சுவை நடிகர் சங்கர் ஏழுமலை என்று நிஜப் பெயர் கொண்ட கிங்காங் ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்திற்கு வருகை மேற்கொண்டார்.
அவரின் வருகை பொதுமக்கள் மற்றும் சினிமா இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது
.இவர் சினிமா துறையில் குள்ள நடிகர்கள்கள் வரிசையில் தொடர்ந்து வெற்றியாளராக திகழ்ந்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, அவருடன் நகைச்சுவை நடிகர் முத்துகாளையும் வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சி நடிகர் எம். ஜி. ஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற காலத்தை வென்றவன் நிகழ்வில் கலத்துக்கொள்ள இவர்கள் கலந்துக்கொள்ள வருகை பரிந்தனர்.
அதே வேளையில் டி.என்.எஸ் நகைக்கடைக்கு வருகையளித்த இரசிகர்களை காண வேண்டும் என்ற அவர்களின் ஆசையும் நிறைவு செய்யப்பட்டது.
சினிமாத் துறை கிங்
கிங்காங் மற்றும் குள்ளமானர்களுக்கும் வாய்ப்பு வழங்கி வந்துள்ளது. அந்த வரிசையில் சினிமாவில் வளர்ச்சி கண்டதாகவும் அதனுடன் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுபவம் மிகவும் சிறப்பாகவும் என்று அவர் கருத்துரைத்தார்.
முதல் முதலாக “சென்னை எக்பிரஸ் “படத்தில் நடிகர் ஷாருகானுடன் நடித்தது சிறந்த அனுபவமாகும். இதன் வாயிலாக 1988 ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கியதாகவும், இதன் வாயிலாக சினிமாத் துறையில் வளர்ச்சி கண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 36 ஆண்டுகள் சினிமாவில் நடிக்கத் தொடங்கினேன் தொடர்ந்து நடிப்பேன் , .பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருவதாகவும் தெரிவித்தார்.
சினிமாவில் ‘ ஸ்டான்ட’ நடிகராக சினிமாவில. நுழைந்து இனறு நகைச் சுவை நடிப்பில்ல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் மற்றொரு நடிகர் முத்துகாளை.
இவரின் வருகை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 1986 ஆம் ஆண்டு சென்னைக்கு சினிமா வாய்ப்பிற்கு வந்து 1997 ஆம் ஆண்டு சினிமாவில் ஸ்டன் நடிகராக நடிக்க வந்தவர். ஆனால், இன்று நகைச்சுவை நடிகராக உருவாகி வலம் வந்துக்கொண்டிருப்பதாகவும்
பல முன்னணி நடிகர்களுடன் நடித்தும் வருவதாக அவர் கூறினார்.
இவர்களின் வருகையால் இங்குள்ள லிட்டல் இந்தியா கடைத் தெருவில் இருந்த வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

