
அபுதாபி, ஜூன் 4-
சுவிஸர்லாந்தில் நடைபெறவிருக்கும் RISE தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டின் பயணத்தின் போது துபாய் அபுதாபியை வந்தடைந்துள்ளார் டாக்டர் சத்திய பிரகாஷ்.
இன்று அபுதாபியில் பிரபலமான Adeeb Group நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டாக்டர் அன்சாரியை நேரில் சென்று சந்தித்துள்ளார் எஸ்பிகேர் குழுமத்தின் தோற்றுனர் டாக்டர் சத்திய பிரகாஷ்.
ஐக்கிய அரபு எமிரட்ஸ் (UAE) நாட்டில் நிதி, மருத்துவம், இஞ்சினியரிங், தொழில்நுட்பம் என பல துறைகளிலும் தங்களது வியாபார சேவைகளை துரிதமாக வழங்கிவரும் முன்னனி நிறுவனமாக Adeeb Group நிறுவனம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்று இவர்களுடன் நேரம் ஒதுக்கிட வாய்ப்பு கிடைத்தது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.
இச்சந்திப்பில் மலேசியாவில் இருக்க்கின்ற வியாபர வாய்ப்புகளை பற்றி கலந்துரையாடினோம். அதே வேளையில் இம்மாதிரியான பெரிய நிறுவனம் மலேசியாவிலும் முதலீடு செய்வது குறித்து டாக்டர் அன்சாரிடம் தனது கருத்தை தெரிவித்துள்ளதாக டாக்டர் சத்திய பிரகாஷ் கூறினார்.
மேலும் இச்சந்திப்பில் டிரா மலேசியா தலைர் சரவணன் சின்னபன் கலந்து கொண்டுள்ளார்.

