
புதுடில்லி, ஜூன் 4-
18 ஆவது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இன்று காலை முதல் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் காலையில் துவக்கத்தில் பா.ஜ., 300ம் தாண்டி முன்னிலை சென்று கொண்டிருந்தது.
ஆனால் 10 மணிக்கு மேல் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது.
இருப்பினும் பா.ஜ., தலைமையிலான கூட்டணியே தற்போது 290 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.
பா.ஜ., கட்சி அதிகம் எதிர்பார்த்த உத்திர . பிரதேசம்., மேற்கு வங்கம் பா.ஜ., வின் காலை வாரியது.
மஹாராஷ்ட்டிரா , ராஜஸ்தான் மக்களும் தீர்ப்பை மாற்றி அளித்தனர். இருப்பினும் 3ஆவது முறை ( ஹாட்ரிக் ) பிரதமர் ஆகும் வாய்ப்பை நரேந்திரமோடி பெற்றுள்ளார்.
இந்தியாவில் ஜவஹர்லால் நேரு காலத்திற்கு பின்னர் தொடர்ந்து 3 ஆவது முறை வெற்றி பெற்ற பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
கடந்த 77 ஆண்டுகால வரலாற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டும் வாழ்த்தும் குவிந்து வருகின்றன.
இதனிடையே கடந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி தற்போது 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

