
தமிழகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நாற்பதும் நமதே என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியது போல் 40இல் வெற்றியை நெருங்கியுள்ளது.
எதிர்கட்சியான அதிமுக மண்ணை கவ்வியது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதன் கூட்டணியான தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் முன்னிலை வகித்து இறுதியில் பின் தங்கினார்.
தமிழக வரலாற்றில் பா.ஜ., இது வரை இல்லாத அளவுக்கு பல தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது
7 தொகுதிகளில் அதிமுக 3 ஆவது இடத்திற்கும் 3 தொகுதிகளில் 4ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
மத்திய சென்னை, தென்சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுச்சேரி, வேலூர், தேனி, ராமநாதபுரம் தொகுதிகள் பா.ஜ.,வுக்கு 2 இடத்தை தந்துள்ளது. 30 தொகுதிகளில் அதிமுக 2ஆவது இடத்தை பிடித்துள்ளது. பா.ஜ., கூட்டணி 10 தொகுதிகளில் 2 ஆவது இடத்திற்கு வந்துள்ளது.
பா.ஜ.,வுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டதால் பழனிசாமி எதிர்வினை முடிவை சந்தித்து இருப்பதாக அரசியலாளர்கள் கூறுகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் , ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கட்கிள் இடம் பெற்றன. திமுகவை பொறுத்தவரை எப்போதும் உள்ள திமுக ஓட்டுக்கள் சிதறவில்லை.
மேலும் சமீபத்திய பெண்களுக்கான உரிமைத் தொகை மாதம் ஆயிரம், பெண்களுக்கு இலவச தொகை, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி என்ற திட்டங்கள் வரவேற்பை பெற்று திமுகவுக்கு பெண்களின் ஆதரவு ஓட்டாக மாறியது.
தமிழ் நாட்டில் திமுக கூட்டணி மிகவும் வலிமையுடன் உள்ளது என்பது இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

