பேராக் மாநிலத்தில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் இம்முறை பக்கத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
சுங்கை சிப்புட் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் மீண்டும் கெஅடிலான் சார்பில் போட்டியிடுகிறார்.
தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் கெஅடிலான் சார்பில் பிரபல வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி இம்முறை போட்டியிடுகிறார்.
மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மீண்டும் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். இங்கு ஏழு பேர் போட்டியிடுகிறார்கள்.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத்தில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி பெற்று வருகிறார்