டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதிக்கும்!

மக்களின் அன்றாட வாழ்க்கையில் நீரும், மின்சாரமும் எப்படி மிகவும் அத்தியாசமான தேவையோ அதே போன்று எண்ணெய் அதாவது டீசல் எரிபொருள்
மிகவும் அத்தியாவசியமாகி விட்டது.

நமது தாய் நாடான மலேசிய நாடு விடுதலை பெற்ற நாள் தொடங்கி இன்று வரை வரலாற்றிலே குறிக்கப் படும் அளவிற்கு டீசல் எண்ணெய் விலையேற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப் பட்டிருப்பது அதிர்ச்சி ஏற்றப்படுத்தியுள்ளது
என்றால் அது மிகையாகாது.

இந்த அளவிற்கு பெரிய விளையேற்றமானது மக்கள் மீது விழுந்த ஒரு பேரிடியாகும் என்று பகாங் மாநில உரிமை கட்சியின் தலைவர் திரு. கணேசன் அவர்கள் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

டீசல் எண்ணெய் விலையில் கண்டுள்ள விலையேற்றமானது குறைந்த வருவாயை தங்களது வருமானமாக கொண்டுள்ள பொது மக்கள் அன்றாட வாழ்வில் பயன் படுத்தி வரும் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து, பொருள்கள் கொண்டு செல்லும் கனரக போக்குவரத்து வாகனங்கள் இந்த எண்ணெய் விலை ஏற்ற சுமையை நிவர்த்தி செய்யும் விதமாக போக்கு வரத்து கட்டணங்களை உயர்த்துவது தின்னம். போக்குவரத்து கட்டணங்கள் உயரும் பொழுது அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கண்டிப்பாக உயரும். இந்த பொருள்களின் விலை ஏற்றத்தை தவிர்க்க இயலாது.

டீசல் எரிப்பொருள் விலை உயர்வின் தாக்கத்தைக் இனி பொது மக்களும் வணிக நிறுவனங்களும் கண்டிப்பாக எதிர் கொள்ள வேண்டிய கட்டாய சூல்நிலைக்கு தள்ளப்படுவது தவிர்க்க இயலாது.

அதனால் சமுதாயத்தில் ஏற்படும் தொடர் விளைவுகளை  எண்ணிப் பார்த்து டீசல் எரிப்பொருள் விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், சமுதாய நலன் கருதி விலைக் கொள்கையில் உரிய  மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றும்; தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை  உயர்வினைத் மீண்டும் திரும்பப் பெற வேண்டுமென்றும்
திரு கணேசன் வலியுறுத்தினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles