சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உதவிக்கரம்!

செ.வே.முத்தமிழ்மன்னன்

சுங்கை பூலோ, ஜூன் 10-
டமான்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியும் இடம் பெற்றுள்ளது.

மறுசீரமைப்புப் பணிகளுக்காக எனது ஒதுக்கீட்டில் பங்களிப்பைப் பெற்ற மற்றொரு தமிழ்ப் பள்ளியாக சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளி விளங்குகிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

பள்ளியின் கேன்டீன் மற்றும் வகுப்பறைகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக மேம்படுத்தப்பட்டுள்ளன அதே நேரத்தில் பள்ளியின் கூடுதல் கூரையும் மேம்படுத்தப்பட்டுள்ளது,.

அடிக்கடி மாறும் வானிலையிலிருந்து பள்ளியின் குடியிருப்பாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது என்று நேற்று பள்ளிக்கு வருகை புரிந்த போது டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles