
செர்டாங், ஜூன் 11 – எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மலேசியா விவசாயம், தோட்டக்கலை மற்றும் வேளாண் சுற்றுலா (மஹா) கண்காட்சி 600 கோடி வெள்ளி மதிப்பிலான ஒப்பந்தங்களையும், 400 கோடி வெள்ளி நேரடி விற்பனையையும் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
.
கடந்த 1923ஆம் ஆண்டு முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மஹா கண்காட்சிக்காக அடைவு நிலைக்கான குறியீடு (கே.பி.ஐ.) அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
bernama

