விபத்தில் சிக்கி உயிரிழந்த நான்கு நபர்களின் உறவினர்களுக்கு பிரதமர் 40,000 வெள்ளி நன்கொடை !

அலோர் காஜா, ஜூன் 11: கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பகாங்கின் ஜாலான் குவாந்தான்-செகாமட்டில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த நான்கு நபர்களின் உறவினர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரிங்கிட் 40,000 நன்கொடையாக வழங்கினார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM10,000 நன்கொடை என்று பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் மூலம் வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையானது மிகவும் கடினமான நிலைக்கு உள்ளான குடும்பங்கள் மீது பிரதமரின் மற்றும் அரசாங்கத்தின் அக்கறையின் அடையாளம் என்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் ஷம்சுல் இஸ்கண்டார் தெரிவித்தார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles