
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் பிஎஸ்எம் கட்சி சார்பில் இந்த பொதுத் தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎஸ்எம் கட்சி சார்பில் தோழர் தினகரன் போட்டியிடுகிறார்.
அதேசமயம் பேராக் மாநிலத்தில் உள்ள ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதியில் இளம் புரட்சி வேட்பாளர் பவானி போட்டியிடுகிறார்.
பலம் வாய்ந்த கட்சிகளுக்கு மத்தியில் பிஎஸ்எம் வேட்பாளர்கள் கடுமையான போட்டியை கொடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.