
மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்த துரோகிகளை நிராகரிக்கும்படி அம்பாங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரோட்சியா வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை மக்கள் புறக்கணிப்பதற்கு இதுவே தக்க தருணமாகும்.
அவர்கள் யாராக இருந்தாலும் பாதகமில்லை. இரண்டு, மூன்று முறை தொகுதியை தங்கள் வசம் வைத்திருக்கலாம்.
ஏன், மந்திரியாக கூட இருக்கலாம்.
ஆனால், அத்தகைய துரோகிகளுக்கு இனி அம்பாங்கில் இடமில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஹராப்பான் சார்பில் அம்பாங் தொகுதியில் போட்டியிட்டு வென்றி பெற்ற ஜூரைடா கமாருடினை இவர் நேரடியாக சாடினார்.
