தேர்ச்சி பெற்ற ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்! டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள்

காஜாங், ஜூன் 15-
தேர்ச்சி பெற்ற ஆங்கில மொழி ஆசிரியர்கள் நாட்டில் நிறையவே உள்ளனர்.

மேலும் புலமைப் பெற்ற ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கு பதிலாக இவர்களை பணியில் அமர்த்தலாம் என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என்ற கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு விவேகத்துடன் முடிவு எடுக்க வேண்டும்.

நாம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பாடம் போதித்த திறமையான ஆசிரியர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

அவர்களை அடையாளம் கண்டு பணியில் அமர்த்தினால் மிகவும் சிறப்பு.

அதேசமயம் இன்னமும் புலமையுடன் விளங்கும் ஓய்வு பெற்ற முன்னாள் ஆங்கில மொழி ஆசிரியர்களின் சேவையும் கல்வி அமைச்சர் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நமது ஆங்கில மொழி ஆசிரியர்கள் எதிலும் குறைந்தவர்கள் அல்ல. ஏராளமான மாணவர்களுக்கு பாடம் போதித்த திறமையும் அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது என்டார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles