
கோலாலம்பூர், ஜூன் 15
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் ஆகியோருக்கிடையேயான தனிப்பட்ட தகராறுகள் மற்றும் அவதூறு வழக்கை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.
அன்வார் மற்றும் முகைதீன் ஆகியோர் அவரவர் முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில், அவதூறு வழக்கின் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியின் பரிந்துரைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக மக்களின் உயிர் வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்த தொடர்பில் தொடர் அறிக்கைகள் எதனையும் வெளியிட வேண்டாம் என இரு சாராரும் இணங்கி உள்ளதாகவும், இந்த தீர்மானம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் என நம்புவதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Bernama

