உணவுப் பொருட்கள் தொடர்பாக நல்ல செய்தியைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை அறிவிப்பார்!

கோலாலம்பூர்: ஜூன் 15-
உணவுப் பொருட்கள் தொடர்பாக ஒரு நல்ல செய்தியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை அறிவிக்கவுள்ளார் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இன்று தெரிவித்தார்.

இது நிச்சயம் பொதுமக்களுக்கு நற்செய்தியாக அமையும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் சொன்னார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் நாளை அறிவிக்கும் தகவல் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட ஃபஹ்மி ஃபாட்சில் மறுத்துவிட்டார்.

இருப்பினும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்புக்காகக் அனைவரும் காத்திருக்குமாறு பந்தாய் டாலாமிலுள்ள மைடின் மார்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்டப் பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles