
கொச்சின், ஜூன் 15-
குவைத் தீ விபத்தில் பலியான தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் உள்பட 45 பேரின் உடல்கள் கேரள மாநிலம் கொச்சி வந்தன.
விமான நிலையத்தில் முதல்வர் பினராயி விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி செலுத்தினர்.
அதே விமானத்தில் மற்ற மாநிலங்களை சேர்ந்த 14 பேரின் உடல்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும் 7 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

