
லக்னோ, ஜூன் 16-
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்த நிலையில், உத்தரபிரதேச துணை முதல்வரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகியை ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பெரும் வெற்றிக் கனவை உத்தரபிரதேச மாநிலம் சிதைத்தது.
மொத்தமுள்ள 80 இடங்களில் 33 இடங்களை மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது.
உத்தரபிரதேசத்தில் போட்டியிட்ட ஒன்றிய, மாநில அமைச்சர்களும், பிரபலங்களும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.
ராமர் கோயில் இருக்கும் அயோத்திக்கு உட்பட்ட தொகுதியிலும் கூட பாஜக தோல்வியை சந்தித்தது.
கடும் பின்னடைவை பாஜக சந்தித்ததால், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது மற்ற சகாக்கள் மீது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
உத்திர பிரதேச மாநில பாஜகவில் பெரும் புகைச்சல் எழுந்துள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை காணவில்லை என்று கூறப்படுகிறது.

