‘தவளை போல கூச்சல் போட்ட அண்ணாமலையை காணவில்லை’; எம்ஜிஆருக்கு சத்துணவு திட்டம் போல் ஸ்டாலினுக்கு காலை சிற்றுண்டி திட்டம்:

விக்கிரவாண்டி, ஜூன் 16- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுக கூட்டம் மற்றும் திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று விக்கிரவாண்டியில் மிகப்பெரிய அளவில் நடந்தது.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றினார் .

இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய அளவுக்கு வல்லமை வாய்ந்த ஒரு தலைவராக தமிழக முதல்வர் ஸ்டாலின் விளங்குகிறார்

எம்ஜிஆருக்கு சத்துணவு திட்டம் எப்படி என்று சொல்வார்களோ, அதைப்போல வரலாறு இனி எப்போதும் காலை சிற்றுண்டி திட்டம் என்றால் தளபதி ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டமாகும்.

எண்ணற்ற பல திட்டங்களை மக்களுக்கு கொடுத்து மக்கள் நலன்களில் அக்கறை காட்ட கூடிய ஒரு முதல்வராக இருந்து வருகிறார்.

தமிழ்நாட்டில் மழை காலத்து தவளை போல கூச்சல் போட்டுக் கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே இருக்கிறார். அவரை காணவில்லை.

சனாதன சக்திகளுக்கு இடமில்லை என்று தேர்தல்களின் மூலம் மக்கள் தீர்ப்பளித்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles