மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்கள் மீட்பு

கோலாலம்பூர், ஜூன் 16 – ஷா ஆலமில் உள்ள பணிப்பெண் சேவை நிறுவனத்தின் தங்குமிடத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 14) போலீசார் நடத்திய சோதனையில் மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 17 இந்தோனேசியப் பெண்கள் மீட்டப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 2007ஆம் ஆண்டு ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு (ATIPSOM) சட்டத்தின் 44(1) வது பிரிவின் கீழ் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) டி3 பிரிவு உதவித் தலைவர் எஸ்.ஏ.சி. சோஃபியன் சான்தோங் தெரிவித்தார்.

25 முதல் 45 வயதுக்குட்பட்ட அப்பெண்கள் அனைவரும் ஓப்ஸ் பிந்தாஸ் நடவடிக்கையின் வாயிலாக இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டனர்.

வீட்டு பணிப்பெண்களாக வேலை வழங்கப்பட்டு கட்டாயத் தொழிலாளர்களாக அவர்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் சிலர் ஊதியம் ஊதியம் வழங்கப்படாமல் சுரண்டப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles