
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி ரேபரேலி தொகுதி எம்.பியாக நீடிக்க முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் ராஜினாமா செய்கிறார்.
அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றார்.

