
ஷா ஆலம், ஏப்ரல் 17: ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து எரிபொருள் ஏற்றிவந்த மலேசியக் கப்பல் ஒன்று நாட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மற்றொரு கப்பல் மலேசியக் கடல் பகுதியை நெருங்கிக் கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் இதுவரை இரண்டு கப்பல்கள் அந்த கடல் வழியை வெற்றிகரமாகக் கடந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட ஏழு கப்பல்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள துறைமுகத்திலிருந்து புறப்பட முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது, அந்த ஜலசந்தியைக் கடக்காத மீதமுள்ள ஐந்து கப்பல்களின் நடமாட்டத்தையும் அரசாங்கம் கண்காணித்து வருகிறது.
“ஒரு கப்பல் வந்துவிட்டது, இன்னொன்று மலேசியக் கடல் பகுதிக்குள் நுழையவிருக்கிறது. ஆக, இரண்டு கப்பல்கள் வந்துவிட்டன. மற்றவை, புதிய முடிவுகளின்படி ஏற்கனவே புறப்பட்டிருந்தாலும், நாம் இன்னும் கண்காணித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
bernama

