
கோலாலம்பூர், ஜூன் 18- சீனப் பிரதமர் லீ கியாங் மலேசியாவுக்கு வருகை புரியும் போது முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றோடு பசுமை எரிசக்தி, மூலப் பொருள் துறைகள் குறித்து சீனாவும் மலேசியாவும் பேச்சு நடத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனப் பிரதமராக கடந்தாண்டு மார்ச் மாதம் பதவியேற்ற லீ மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று மலேசியா வருகிறார்.
மலேசியா-சீனா இடையிலான அரச தந்திர உறவின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி அவரின் இந்த வருகை அமைகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் சீனப் பிரதமர் இந்த வருகையை மேற்கொள்கிறார்.
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின் போது மடாணி கட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் மற்றும் வர்த்தகம், முதலீடு, சேவைத் துறைகளை வலுப்படுத்தும் புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கியத் தன்மை மீது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக
Bernama

