
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஜூன் 18-
மலேசிய ஊடக வரலாற்றில் தனிமனிதனாக தேசம் ஊடகத்தை தொடங்கி இன்று 15 ஆண்டுகள் நிறைவு விழாவை எட்டிப் பிடித்தது மட்டுமல்லாமல் மலேசியாவில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நோக்கத்தில் விருது விழாவை நடத்திய முதல் நிறுவனம் தேசம் ஊடமாகும்.
கடந்த 15 ஆண்டுகளில், தேசம் மீடியா குழுமம் ஒரு மரியாதைக்குரிய மற்றும் செல்வாக்கு மிக்க நிறுவனமாக வளர்ந்துள்ளது,
கடந்த 31.08.2009இல் தொடங்கப்பட்ட தேசம் ஊடக குழுமம், 2010ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயா, தொட்ட மாளிகையில் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் 10 பேருக்கு விருது வழங்கியது.
அதன் பிறகுதான் தேசம் ஊடகத்தின் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் சாதனையாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து முதல் முறையாக தமிழ்நாடு திருவண்ணாமலையிலும் சாதனையாளர் அதன்பிறகு விருது விழாவை நடத்தினார்
தேசம் விருது விழா கடல் கடந்து தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் 2017 في ஆண்டு தமிழ்நாடு திருவண்ணாமலையில் தேசம் சாதனையாளர்கள் விருது விழாவையும் நடத்தினார்.
கடந்த ஆண்டு தேசம் விருது 2023இல் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இம்முறை தேசம் ஊடகத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு Desam International Icon Award 2024 விருது விழா அக்டோர் 5ஆம் தேதி சனிக்கிழமை பண்டார் சௌஜனா புத்ரா, Mahsa University Ballroom மண்டபத்தில் நடைபெறும்.
ஊடகம், கலைத்துறை, வர்த்தகம், விளையாட்டு, அரசியல், ஆண்டின் சின்னங்கள், வாழ்நாள் சாதனையாளர் என்று பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ், தகவல் தொடர்பு துறை அமைச்சின் பிரதிநிதியாக அதிகாரி குமரன் , ம.இ.கா. மத்திய செயளவை உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், கோலாலம்பூர் சிலாங்கூர் மாநில வர்தகர் சம்மேளன தலைவர் நிவாஸ் ராகவன், இந்தியா கேட் உணவக தோற்றுனர் சரவணன் சுப்பிரமணியம் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்

