
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வரும் வேளையில், வட – தென் கொரிய எல்லையில் உள்ள ராணுவமற்ற மண்டலத்திற்குள்(Demilitarised Zone) வட கொரிய வீரர்கள் அத்துமீறியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
அவர்களை எச்சரிக்கும் வகையில் தென் கொரிய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வட கொரிய வீரர்கள் பின்வாங்கினர். அவர்கள் எல்லை மீறியது வேண்டுமென்றே நடந்தது அல்ல என்று தென் கொரியா நம்புகிறது.
எல்லையை பாதுகாக்கும் பணியில் இருந்த வீரர்கள் தற்செயலாக அந்த மண்டலத்திற்குள் பிரவேசித்திருக்கலாம் என்று நம்புவதாக தென் கொரியா கூறியுள்ளது. இது ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது சம்பவம் ஆகும்.
reuters.