

பெலாம் கெடா ஏப்ரல் 16-
ஒரு காலத்தில் அதிகமான இந்தியர்கள் வாழ்ந்த தோட்டம் கெடா பெக்கான் மாலாவின் பெலாம் எஸ்டேட். தென் மாவட்டத்தில் பல சரித்திரங்களை கொண்ட இந்த தோட்டத்தில் அதிகமான தெலுங்கு வம்சாவளியினர்கள் தங்களின் குல தெய்வமான
நோக்கலமன்ணை தரிசித்து வந்தனர்.
இந்த ஆலயம் செம்பனை பகுதியில் இருந்ததால்,அவற்றை அருகாமையில் உள்ள ஶ்ரீ முத்து மாரியம்மன் கோயில் பக்கத்தில் மாற்றும் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்துக்கு தோட்ட நிர்வாகத்துடன் ஸ்தாபகர் சூரியதேடூ சூரிய பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்று திருப்பணி செய்யப்பட்டது.

கடந்த 12.4.26 அன்று மஹா கும்பாபிஷேகம் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.3000 பக்தர்கள் கலந்துக் கொண்டு காணிக்கையுடன் வேண்டுதலை நிறைவேற்றினர். ஆகம முறைகளின் வழி 20 குருக்கள் மந்திரங்கள் பாடி ஐந்து நாட்கள் இடைவிடாத யாகங்களை வளர்த்து அம்மனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி மகிழ்ந்தனர்.
எல்லா வகையில் ஆலய திருப்பணி மற்றும் மஹா கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை,பணமாக பொருளாக கொடுத்து உதவியை அனைவருக்கும் ஆலய வெற்றிக்கு துணையாக செயல்பட்ட இளம் தொழிலதிபர் லோகேஷ் ராவ் நன்றிகளை பதிவு செய்தார்.

