
சிரம்பான் ஜூலை 16-.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் இரண்டு தொகுதிகளில் ம இகா போட்டியிடுகிறது.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் டத்தோ தினாளன் ராஜகோபால் போட்டியிடுகிறார்.
அதேசமயம் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக வேட்பாளர் முகுந்தன் போட்டியிடுகிறார்.
ம இகா தேசிய தகவல் தொடர்பு துறை தலைவராக இருக்கும் டத்தோ தினாளன் ராஜகோபால் சிரம்பான் ஜெயா தொகுதியில் போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் ம இகா சார்பில் அச்சுதன் அழகன் போட்டியிடுகிறார்.
ஃபோர்ட் டிக்சன் ம இகா தொகுதி தலைவர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில ம இகா பொருளாளராக இவர் இருக்கிறார்.
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் இந்த தொகுதியில் கெஅடிலான் வேட்பாளர் டாக்டர் ராஜசேகரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

