மீதமுள்ள 11 இடங்களில் போட்டியிடும் தே.மு வேட்பாளர்கள் யார்? விரைவில் வெளியிடப்படும்

சிரம்பான் ஜூலை 16- நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போட்டியிடும் மொத்தமுள்ள 36 வேட்பாளர்களில் 25 பேரை தேசிய முன்னணி நேற்று அறிவித்தது.

இந்தப் பட்டியலை அறிவித்த BN துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹமம்து ஹசான் மீதமுள்ள 11 மாநில சட்டமன்ற இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.

இதில் கிளாவாங், செர்டிங், லோபாக், சிகாமட், அம்பாங்கன், புக்கிட் கெபாயாங், மம்பாவ், பாரோய், லுக்குட், பாகான் பினாங், கெமாஸ் ஆகிய இடங்கள் அடங்கும்.

இன்னும் காலியாக உள்ள இடங்களுக்கு மற்றொரு அறிவிப்பு வெளியிடப்படும்.

ஏனெனில் இந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி நம்பகமான ‘நண்பர்களுடன்’ ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles