
கோலாலம்பூர், நவ 2-
நாட்டில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்களின் பங்களிப்பு அளப்பரியது என்று அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் புகழாரம் சூட்டினார்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி விருந்து நிகழ்ச்சி நேற்று பத்து கேவ்ஸ் ஷங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
கெடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளர் வழக்கறிஞர் சிவமலர் பேசுகையில் நாட்டில் தமிழை வளர்த்து வரும் தமிழ் பத்திரிகையாளர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள் என்று தெரிவித்தார்.
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தமது உரையில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் ஆண்டுதோறும் தீபாவளி விருந்து நிகழ்ச்சியை நடத்தி அதன் உறுப்பினர்களுக்கு அன்பளிப்பு வழங்கி வருகிறது.
மேலும் நாட்டில் இந்தியர்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வும் கண்டு வருகிறது.
இந்திய சமுதாயத்தின் குரலாக தமிழ்ப் பத்திரிகைகள் விளங்குகிறது என்று பாராட்டினார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேன் கந்தா பேசுகையில் இன்று நாட்டில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தலை சிறந்த விளங்குவதற்கு தமிழ்ப் பத்திரிகைகள் ஆற்றிய பணிகள் அளப்பரியது என்று வர்ணித்தார்.
மைக்கி எனப்படும் மலேசிய இந்தியர் வர்த்தக தொழில் சங்கத்தின் மகளிர் அணி தலைவி ஹேமலா சிவம் பேசுகையில் நாட்டில் தமிழ் ஊடகங்கள் ஆற்றி வரும் பணிகளை பாராட்டுக்குரியது என்றார்.
புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் பேசுகையில் பல சவால்களை எதிர் நோக்கினாலும் தமிழ்ப் பத்திரிகைகள் தங்களது பணிகளை சிறப்பாக செய்து வருகிறது என்றார்.
Dato’ Beatrice Nirmala, Group Managing Editor, The IBR Asia Group உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

