பினாங்கில் விமரிசையாக நடைபெற்ற இளைஞர் விழுப்புணர்வு எழுச்சி பட்டறை!

பிறை, நவ 1-
மலேசியா, பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (USM) நடைபெற்ற ‘கோட் ரெட் பினாங்கு’ (Code Red Penang) இளைஞர் விழிப்புணர்வு மற்றும் எழுச்சிப் பெருவிழா மிகச் சிறப்பான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் (MIYC) பினாங்கு மாநில கிளையும், பல்வேறு அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இம்மாபெரும் நிகழ்வில், இளைஞர்களின் தனித்திறன்களை வளர்த்தல், உடல்நலம், சட்டம் மற்றும் கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு அமர்வுகள் இடம்பெற்றன.

இச்சிறப்புமிக்க நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டுத்துறை துணை அமைச்சரும், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு கோ. யூனிஸ்வரன் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், இக்கட்டுரையுடன் வெளியிடப் பட்டுள்ள புகைப்படங்கள் இந்நிகழ்ச்சியின் உற்சாகமான தருணங்களையும், இளைஞர்களின் மாபெரும் பங்களிப்பையும் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles