
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜூலை 16-
செந்தூல் வட்டாரத்தில் சிறுதொழில் வியாபாரிகளுக்கு உதவும் வகையில் வணிக கூடாரங்கள் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த வணிக கூடாரங்கள் மொத்தம் 15 வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் இன்று நேரடியாக வியாபாரிகளிடம் இந்த வணிக கூடாரங்களை வழங்கினார்.
செந்தூல் காளியம்மன் கோவில் முன் புறம் பூக்கடை வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் இந்த வணிக கூடாரங்களை பெற்றனர்.

மேலும் இவர்கள் முறையாக வியாபாரம் செய்ய டிபிகேஎல் லைசென்ஸ் உரிமம் பெற்றுத் தந்துள்ளோம் என்று பிரபாகரன் தெரிவித்தார்.
இனியும் இவர்கள் அச்சம் இன்றி வியாபாரம் செய்யலாம்.யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
நீங்களும் விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே வணிக கூடாரங்கள் பெற்ற வியாபாரிகள் மடானி அரசுக்கும் மாண்புமிகு பிரபாகரனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

