சுங்கை பாக்காப் இந்தியர்களுடனான மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் சந்திப்புக்கூட்டம்

சுங்கை பக்காப் ஜூன் 20-

, நேற்று தொடங்கி நாளை வெள்ளிக்கிழமை வரை பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (MITRA) பினாங்கு சுங்கை பாக்காப்பில் பொதுமக்களுடனான சந்திப்புக் கூட்டத்தை நடத்துகிறது.

அப்பகுதியில் வாழும் மக்களின் தேவைகள் குறித்து கலந்தாலோசிக்கவும் தேவையான தகவல்களை மக்களுக்கு வழங்கும் நோக்கிலும் இச்சந்திப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மித்ராவோடு பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு, சுகாதார அமைச்சு, தெக்கூன், சொக்சோ, பென், ஐ- சீட், டிரா மலேசியா போன்ற இதர பிற அமைப்புகளும் கலந்துகொண்டு பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை வழங்குவர்.

மக்களின் ஐயங்களுக்குத் தீர்வு காண்பதோடு, பிரச்சனைகளைக் களையவும் உதவிகள் செய்வர்.

காலை 9 தொடங்கி மாலை 5 மணிவரை பண்டார் தாசிக் முத்தியாரா மண்டபத்தில் (Dewan Orang Ramai Bandar Tasek Mutiara 5, 42A, Lorong 19/SS9, Bandar Tasek Mutiara, 14120 Simpang Ampat, Pulau Pinang) இந்த நிகழ்வில் பொது மக்கள் கலந்து கொள்ளலாம்.

சிவப்பு அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம், குடியுரிமைப் பிரச்சனைகள் போன்ற அடையாள ஆவணப் பிரச்சனையுடையவர்கள், இந்நிகழ்வில் டிரா மலேசியா அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை பெறலாம்.

மேலும் அரசாங்கம் மக்களுக்காக ஏற்படுத்தித் தந்திருக்கின்ற உதவிகள், முன்னெடுப்புகள், திட்டங்கள், கடனுதவிகள், அரசுமாணியங்கள் போன்ற தகவல்களையும் இந்தச் சந்திப்புக்கூட்டத்தில் வந்து மக்கள் பெற்றுக்கொண்டால் பல நன்மைகளைப் பெறலாம் என பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி திரு. சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

சுற்றுவட்டார பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு நன்மை பெற அழைக்கப்படுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles