


செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர் ஜூன் 23-
செந்தூல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் 33ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
நாட்டில் புகழ் பெற்ற ஆலயமாக செந்தூல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் விளங்குகிறது.
இவ்வாலயத்தின் வருடாந்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறும்.
அவ்வகையில் 33ஆவது வருடாந்திர திருவிழா இன்று நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆலயத்தில் விழாக் கோலம் பூண்டுள்ளது.
ஒவ்வொரு இரவும் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
இன்று உச்சக்கட்டமாக காலை முதல் பக்தர்கள் பால்குடம், கரகம், தீச்சட்டி, காவடிகள் ஏந்தி தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது ஆலயத்தில் திரண்டுள்ளனர்.
பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

