கட்சியின் ஒற்றுமை மிக முக்கியம்! பேராளர்கள் முழு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது! டத்தோ டி மோகன் கூறுகிறார்

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஜூன் 23-
ம இகா கட்சியில் ஓற்றுமை நீடிக்க வேண்டும். அதனால் தான் நான் மீண்டும் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று டத்தோ டி மோகன் தெரிவித்தார்.

நேற்று ம இகா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு மொத்தம் 4 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

நடப்பு உதவித் தலைவர் டத்தோ மோகன், டத்தோ முருகையா மற்றும் டத்தோ அசோஜன் ஆகியோர் பதவியை தற்காத்துக் கொள்ள போட்டியிடுகிறார்கள்.

ம இகா கல்வி குழு தலைவராக இருக்கும் டத்தோ நெல்சன் இம்முறை உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்த முறையும் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று டத்தோ மோகன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles