
கோலாலம்பூர் ஜூன் 23-
ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு நாடாறிந்ந சமூக சேவையாளர் டத்தோ எஸ் எம் முத்து போட்டியிடுகிறார்.
மொத்தம் 22 மத்திய செயலவை பதவிக்கு 45 பேர் போட்டியிடுகிறார்கள்.
இதில் மலேசிய ஓட்டப் பந்தய சங்கத்தின் முன்னாள் தலைவரும் பெட்டாலிங் ஜெயா ம இகா தொகுதி தலைவருமான டத்தோ எஸ் எம் முத்து போட்டியிடுகிறார்.
மலேசிய அரசியலில் நீண்ட ஸஅனுபவம் வாய்ந்த டத்தோ எஸ் எம் முத்து மிகச்சிறந்த சமூக சேவையாளர் ஆவார்.
வசதி குறைந்த ஏழை மக்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அதிக அளவில் உதவி கரம் நீட்டியவர்.
கோவில்களுக்கு அதில் அளவில் உதவி புரிந்துள்ளார்.
ம இகா உயர்மட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இவர் இந்திய சமுதாயத்திற்கு தொடர்ந்து சேவையாற்ற மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

